தினமும் கல்லாப்பெட்டியில் காசை ஆட்டையப்போடும் திருட்டு எலி - வைரலாகும் வீடியோ!
பழக்கடையில் இருந்து காசை ஒரு எலி எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருட்டு எலி
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினமும் இரவில் வைக்கப்படும் பணம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் கடையில் சிசிடிவி கேமராவை பொருத்தி சோதனை செய்தார்.
அப்பொழுது விடியற்காலை 4 மணி அளவில் இவரது கடைக்குள் ஒரு எலி புகுந்து அங்கு ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை லாவகமாக எடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோ
இதனை தொடர்ந்து, அந்த சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், காலையில் கடையில் அனைத்து பொருட்களையும் அகற்றி எலியின் இருப்பிடத்தை கண்டறிய முயன்றுள்ளார்.
அப்பொழுது பழங்களை வைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒன்றை கடித்து அதற்குள் அதனின் கூட்டை அமைத்திருந்தது. அதற்குள் இதுவரை அந்த எலி திருடிய ரூ.1500 பணத்தை எந்த சேதமும் இன்றி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.