எங்களை பார்த்தால் எலிக்கு பயமில்லை... 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிடுச்சு... - உ.பி. போலீசார் குற்றச்சாட்டு...!
உத்திரப்பிரதேசத்தில் 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக, எலிகள் மீது மதுரா போலீஸ் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா வேட்டை
உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைப்பட்டிருந்தது.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் கஞ்சா வேட்டையை போலீசார் நடத்தினர். அப்போது, கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதனையடுத்து, குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டது
இதைத் தொடர்ந்து காவல்துறை கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால், இதையெல்லாம் ஏற்க முடியாது. பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று போலீசாரிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் மதுரா போலீசார் சொன்ன ஒரு தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மதுரா போலீசார் 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாகவும், சிறிய அளவில் இருப்பதால், எலிகளுக்கு போலீசாரை கண்டு பயம் இல்லை என்று போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும், நீதிபதி அப்படியே ஷாக்காவிட்டார்.
ஆனால், வேறொருவரிடத்தில் கஞ்சாக்களை விற்றுவிட்டு, எலிகளின் மீது பழி சுமத்தியது விசாரணையில் தற்போது அம்பலாகியுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.