பர்கரில் எலி கழிவு, அதிர்ச்சியடைந்த பெண் - மெக் டொனால்ட்ஸ்கு ரூ.5 கோடி அபராதம்!

McDonald's United States of America
By Vinothini May 05, 2023 07:17 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பர்கர் உணவில் எலி கழிவு இருந்ததால் வாடிக்கையாளருக்கு ரூ.5 கோடி அளிக்க மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.

சுகாதாரமற்ற உணவு

உலகின் முன்னணி நிறுவனமாக இருப்பது மெக் டொனால்ட்ஸ், இது அமெரிக்காவின், சிக்காகோவை தலைமை இடமாக கொண்டது. இதன் கிளை நிறுவனங்கள் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வருகிறது.

mouse-shit-burger-mcdonalds-fined-5crores

இங்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் வாடிக்கையாளர் ஒருவர், சீஸ் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அப்பொழுது அதில் எலியின் கழிவு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், வால்தம் பாரஸ்ட் கவுன்சிலில் புகாரளித்தார். தொடர்ந்து, சுகாதார துறையினர் அந்த ரெஸ்டாரென்டில் ஆய்வு நடத்தியதில், அது சுகாதாரமற்ற முறையில் நடந்துனு வருவதை அறிந்தனர்.

நீதிமன்றம் தீர்ப்பு

இதனை தொடர்ந்து, இந்த புகார் தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று அதற்காண தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் எனவும், அந்த பெண் சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை ரூ.22.6 லட்சம் மற்றும் கூடுதல் தொகை ரூ.19,537 என மொத்தம் சுமார் ரூ.5 கோடி அபராத தொகை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

mouse-shit-burger-mcdonalds-fined-5crores

மேலும், இது போன்ற நிறுவனங்களிடம் உயர்ந்த சுகாதாரத்தை எதிர்பார்த்து மக்கள் வருகின்றனர் அதை தக்க வைக்கும்படி நடக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. அதுபோல, தவறை ஒப்புக்கொண்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது எனவும் கூறியுள்ளது.