கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டு - கையில் எடுத்த பெண் - அடுத்து ஒரு நொடியில் நடந்த பயங்கர சம்பவம்

Dollars
By Nandhini Jul 20, 2022 10:46 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தரையில் கிடந்த ஒரு டாலர் நோட்டு

கென்டக்கியைச் சேர்ந்தவர் ரெனி பார்சன்ஸ். இவர் தன் குடும்ப உறுப்பினர்களுடன் டெக்காசை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது, உணவு சாப்பிடுவதற்காக டென்னஸ்ஸியிலுள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வண்டியை நிறுத்தினார். உணவகத்தினுள் தரையில் ஒரு டாலர் நோட்டு ஒன்று கிடந்தது. இதைப் பார்த்த ரெனி அந்த டாலர் நோட்டை குனிந்து எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி

அப்போது, திடீரென நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அப்போது, கீழே விழுந்த ரெனியை அவரது கணவர் ஓடி வந்து எழுப்பினார். அப்போது, ரெனி கணவர் ஜஸ்டீன் கையைப் பிடித்தார். அப்போது, அவரது உடல் எரிவது போல் தோன்றியது. திடீரென அவர் கையில் சிவப்புள்ளிகள் தோன்றியது. ஜஸ்டீன் உதடுகள் மறுத்துப்போயின. இதனையடுத்து, அவர்களை மீட்டு குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போய் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேனி பேட்டி

தற்போது, சிகிச்சை முடிந்து கணவன், மனைவி இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து ரேனி பேசுகையில், அந்த ஒரு டாலர் நோட்டில் பயங்கரமான போதைப்பொருள் தடவப்பட்டிருந்திருக்கலாம். இனி, ஒரு டாலர் இல்லை, 100 டாலர் நோட்டு கீழே இருந்தால் கூட அதை நான் தொடக்கூட மாட்டேன். நான் பட்டதே போதும் என்றார். 

dollar-bill