இனி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இவ்வளவு கட்டணம் உயர்வு - அதிர்ச்சி அறிவிப்பு!

Nepal
By Sumathi Jan 24, 2025 07:30 AM GMT
Report

எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணம் உயர்ந்துள்ளது.

எவரெஸ்ட்

நேபாளம், சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர்.

everest

இதற்கு ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 36 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது.

விமான நிலையத்தில் ஒரு டீ விலை ரூ.10 தான் - அட, எங்கே தெரியுமா?

விமான நிலையத்தில் ஒரு டீ விலை ரூ.10 தான் - அட, எங்கே தெரியுமா?

 கட்டணம் உயர்வு

மேலும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில்,

mount climbing fee hike

“நேபாள அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 4 சதவீதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் கிடைக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம்.

இதனால் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை குறையாது. புதிய கட்டண உயர்வு ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.