3 குழந்தைகளை தாக்கி மிளகாய் பொடி தூவிய கொடூரம் - தாயின் காதலன் வெறிச்செயல்
தாயின் காதலன் குழந்தைகளை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாயின் காதல்
ஆந்திரா, ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

தொடர்ந்து அதேப் பகுதியைச் சேர்ந்த பவன் என்பவருடன் பழக்கமாகி அவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பவன், சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல் மற்றும் ரேணுகாவை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
குழந்தைகளுக்கு கொடுமை
இந்நிலையில் செல்போன் சார்ஜர் வயரை பயன்படுத்தி 3 குழந்தைகளையும் பவன் கடுமையாக தாக்கியுள்ளார். அதில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, பவன் தங்களை கடுமையாக தாக்கியும், அந்த காயத்தின் மீது மிளகாய் பொடியை தூவியும் வந்தததாக குழந்தைகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அந்த சமயத்தில் தங்களின் தாய் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் பவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    