1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!
குடும்ப தகராற்றில் குழந்தையைக் கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் ராம்குமார்.இவரது மனைவி திவ்யா இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக திவ்யா கணவரைப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மிகுந்த மன உளைச்சலிலிருந்த திவ்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தனியாகக் குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
தண்ணீர் டிரம்மில் சடலமாகக் கிடந்த 2 சிறுமிகள்..54 வயதுடைய நபர் செய்த கொடூரம்- கதி கலங்க வைக்கும் சம்பவம்!
அப் போது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து திவ்யா தனது 1 வயது ஆண் குழந்தையின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். பிறகு 4 வயது மகனின் கழுத்தையும் அறுத்துவிட்டு தனது கருத்தை அறுத்துக்கொண்டு திவ்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை
அப்போது 4 வயதுக் குழந்தை வலியால் துடித்துக் கத்தியுள்ளது. இந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து உயிரிழந்த ஒரு வயதுக் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.