சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது என்ன?
கொல்கத்தா பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9 தேதி மருத்துவமனை செமினார் அறையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் பிரேதப் பரிசோதனை முடிவில் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் மருத்துவர்கள் , சக மாணவர்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் பெரும் போராட்டங்கள் நடத்தினர். அடுத்த நாளே இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி 45 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது.அதில், பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. குற்றம் நடந்த அந்த சமயத்தில் சஞ்சய் ராய் போதையிலிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி அல்ல
மேலும் 9-ம் தேதி சஞ்சய் ராய் செமினார் அறையில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.குறிப்பாகப் பெண் பயிற்சி மருத்துவர் நகத்திலிருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளைப் பரிசோதனை செய்தனர்.
அது அது சஞ்சய் ராயின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகிறது உள்ளிட்ட தகவல்கள் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் பெண் பயிற்சி மருத்துவர் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என் மகளைச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
இதைத் தனி ஒரு ஆளாகச் செய்து இருக்க முடியாது. எங்கள் மகளைக் கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் தண்டிக்கப்பட்ட பின்னரே இது முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.