2மணி நேரத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட்... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் திடுக்கிடும் பின்னணி!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து தகவல் அனுப்ப மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர்கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநிலம் முழுவதும் குற்றவாளியை கைது செய்ய கோரி மருத்துவர்கள்,செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்பவரை அடுத்த நாளே கொல்கத்தா காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சட்ட ஒழுங்கு நிலை
தொடர்ந்து இந்த சம்பவத்தை எதிர்த்து கர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு மருத்துவ மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தகவல் அனுப்பும் வகையில் , கட்டுப்பாட்டு அறையின் மின்னஞ்சல் முகவரி, வாட்சப் எண்கள், ஃபேக்ஸ் முகவரிகளை மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.