முதல் மனைவியால் தகராறு - 2 பெண் குழந்தைகளுடன் ராயின் முன் பாய்ந்த தாய்!

Tamil nadu Crime Death Ranipet
By Jiyath Feb 27, 2024 10:17 AM GMT
Report

2 பெண் குழந்தைகளுடன் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் மனைவி 

ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி விஜயலட்சுமியை விவாகரத்து செய்துள்ளார்.

முதல் மனைவியால் தகராறு - 2 பெண் குழந்தைகளுடன் ராயின் முன் பாய்ந்த தாய்! | Mother Suicide With Two Children In Ranipet

பின்னர் இரண்டாவதாக வெண்ணிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இதற்கிடையில் முதல் மனைவியை விவாகரத்து செய்ய அறிவழகன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது!

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது!

தற்கொலை 

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, அறிவழகனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக விஜயலட்சுமி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அறிவழகன் வீட்டிற்கு விஜயலட்சுமி வந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

முதல் மனைவியால் தகராறு - 2 பெண் குழந்தைகளுடன் ராயின் முன் பாய்ந்த தாய்! | Mother Suicide With Two Children In Ranipet

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இரண்டாவது மனைவி வெண்ணிலா, தனது 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில் மூவரும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த காட்பாடி ரயில்வே போலீஸார், உடல்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.