2 குழந்தைகளை துடிதுடிக்க எரித்துக் கொன்ற கொடூரத் தாய் - பகீர் பின்னணி!
2 குழந்தைகளை தாய் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
கர்நாடகா, மல்லசமுத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மரக்கா(24). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் 3 பேர் உடல் கருகி நிலையில் இறந்து கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பவ இடம் விரைந்த போலீஸார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எரித்துக் கொலை
அதன்பின், மேற்கண்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக, தனது குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வந்து பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்த மரக்கா, அதன் பின் அவரும் தீக்குளித்து இறந்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து, யிரிழப்பிற்கு காரணம் குடும்பச் சண்டையா அல்லது வேறு பிரச்சினையா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.