காதலனுடன் காரில் செல்ல முயன்ற மகள்; தடுத்து நிறுத்த போராடிய தாய்- நடுரோட்டில் நடந்த நிகழ்வு!
காதலுடன் காரில் செல்ல முயன்ற மகளை தடுத்து நிறுத்த, தாய் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகள்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி கோமலவள்ளி. இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகள்தான் மோகனா. இவர் கருமத்தம்பட்டி அருகே தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தனது தாயுடன் ஊருக்கு செல்ல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை கருமத்தம்பட்டிக்கு அங்கு வந்துள்ளார். எனவே பேருந்து நிறுத்தத்தில் அவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்து நின்ற ஒரு காரில் திடீரென மோகனா ஏற முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கோமலவள்ளி மகளை தடுத்து நிறுத்தவே, காரில் வந்த இளைஞர்கள் மோகனாவை காருக்குள் இழுத்து அங்கிருந்து செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து கோமலவள்ளி தனது மகள் மோகனாவின் தலை முடியை பிடித்தவாறு,
தாய்
காரின் பின்னாலேயே சென்றுள்ளார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், தாய், மகள் மற்றும் இளைஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது, பெண்ணை காரில் கடத்தி செல்ல முயன்ற இளைஞரும், இளம் பெண்ணும், இரு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இளம்பெண்ணை கடத்தி சென்று
திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இளம் பெண்ணிடம் விசாரித்ததில், காதலனுடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து, இளம்பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர்.