அப்பாகிட்ட போக சொன்னேன்..என்கூட சேர்ந்து விஷம் குடிச்சுட்டான் - தற்கொலை செய்த பெண்

Tamil nadu Death
By Sumathi Oct 13, 2022 12:27 PM GMT
Report

தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து வேறுபாடு

திருச்சி, பாலக்குறிச்சி, பெத்தகோன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி (36). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரானந்தம் (42). இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஹரி(8) என்ற மகன் இருந்தார்.

அப்பாகிட்ட போக சொன்னேன்..என்கூட சேர்ந்து விஷம் குடிச்சுட்டான் - தற்கொலை செய்த பெண் | Mother Son Duo Commits Suicide

வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி, ஸ்ரீஹரி ஆகிய இருவரும் புதுக்கோட்டை, பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஜெயபாரதியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது.

தற்கொலை

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது தாய், மகன் இருவரும் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வீட்டில் ஜெயபாரதி எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், "எங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. குடும்ப நிலை, உடல்நிலை, மன அழுத்தத்தால் இம்முடிவை எடுக்கிறேன்.

சிக்கிய கடிதம்

எங்களது உடலை அப்பா, கணவரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக கணவர் எங்களுக்கு என எதுவும் செய்தது கிடையாது. எனது மகனுக்கு தந்தையாகவும், எனக்கு கணவராகவும் அவர் இருந்தது கிடையாது.

மகனிடம் அப்பாவுடன் செல் எனக் கூறினேன். அவனோ இருந்தால் உன்னுடன் இருக்கிறேன். இல்லையென்றால் வேண்டாம் என்று கூறி விஷத்தை என்னுடன் சேர்ந்து குடித்துவிட்டான். இவ்வீட்டில் இருந்து குண்டூசி கூட கணவருக்கோ, அப்பாவுக்கோ கொடுக்கக் கூடாது" என்று எழுதியுள்ளார்.