திருமணமான 3 மாதங்களில் ஐடி இளம் பெண் ஊழியர் தற்கொலை
கோபிச்செட்டிபாளையம் அருகே திருமணமான 3 மாதங்களில் ஐடி துறையில் பணியாற்றும் இளம் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி பெண் ஊழியர் தற்கொலை
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரைச் சேர்ந்த திருவேங்கடசாமி - மரகதம்மாள் என்பவரின் மகள் இந்துமதி.
பொறியியல் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோபிச்செட்டிபாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
விஷ்ணுபாரதி சென்னை உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார் விஷ்ணு பாரதி.
இதையடுத்து இருவரும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்த நிலைியல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தோட்டக்காட்டூரில் உள்ள உடல்நிலை சரியில்லாத பாட்டியை பார்க்க வந்துள்ளனர்.
நேற்று மதியம் இந்துமதி வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற அவர் இரவு வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்தில் முழுமையாக டேப் வைத்து ஒட்டிக் கொண்டு ஹீலியம் வாயுவை டியூப் மூலம் சுவாசித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தற்கொலை குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்காக ஹீலியம் வாயு அடங்கிய சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் பற்றி கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.