வீகன் உணவு.. இறந்த குழந்தை - தாய்க்கு ஆயுள் தண்டனை: பகீர் சம்பவம்
அதி தீவிர சைவ உணவால் இறந்த குழந்தையால், தாய்க்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர சைவம்
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஷீலா ஓ லியரி(38), ரைய். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர்.

அத்துடன் தங்கள் நான்கு குழந்தைகளுக்கும் வீகன் உணவுமுறைப்படி உணவுகளைக் கொடுத்து வந்தனர். கடைசியாக பிறந்து, 18 மாதங்களான ஆண் குழந்தை எஸ்ரா-வுக்கும் தாய்ப்பாலை ஊட்டியதோடு மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள், பச்சை காய்கறிகளை மட்டுமே கூடுதல் உணவாகப் பெற்றோர் அளித்துள்ளனர்.
குழந்தை இறப்பு
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மெலிந்த அந்தக் குழந்தை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூச்சுத் திணறி இறந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்களும், போலீசார் விசாரணையிலும் வெளிவந்த தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.

அதில், ``பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடுமையான வீகன் உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர். 18 மாதங்கள் நிறைவடைந்த அந்தக் குழந்தை இறந்தபோது, ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்தது. இறந்த குழந்தை உட்பட மற்ற மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு,
ஆயுள் தண்டனை
ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளனர். அத்துடன் தம்பதி இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வெளிவந்தது.
குழந்தையின் தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனுக்குப் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாக அளித்ததில் பட்டினியால் அந்தக் குழந்தை இறந்துள்ளது.
கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’ என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.