காதலித்த குற்றம்-ஆயுள் தண்டனை.. நண்பன் கல்யாணத்திற்காக அடித்த பேனர் வைரல்!
நண்பரின் திருமணத்திற்காக அப்பகுதி இளைஞர்கள் வைத்துள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நண்பன் திருமணம்
திண்டுக்கல், கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு கௌவுதமின் நண்பர்கள் நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைத்து வைத்தனர். இதில், காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
பேனர் வைரல்
மேலும், விளையாட்டுச் செய்திகள் என கல்யாண பந்தியில் கலவரம் கரிக்கஞ்சிக்கு கைகலப்பு, பலகாரத்தில் முடிந்த பரிதாபங்கள், பலகாரம் திருடி பளார் என்று அரை வாங்கிய இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது.
'கல்யாண மாலை எங்களுக்குத் தேவை' என பெண் கேட்டும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சாதி மதம் தடையில்லை முன்பதிவு அவசியம்,
படிச்சது போதும் பந்திக்கு போங்க என வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.