தவிக்கும் கணவன் - இன்ஸ்டாகிராம் காதலனுடன் மனைவி செய்த காரியம்!
2 குழந்தைகளை தவிக்க இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
சேலம் மாவட்டம் கிழக்கூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்த்தி (29) - சுதர்சனா (28). காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சுதர்சனா இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனை அவரது கார்த்திக் கண்டித்துள்ளார். ஆனாலும் சுதர்சனா இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அதிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.
மனைவி ஓட்டம்
இதனிடையே 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு, திடீரென அவர் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது கணவர் கார்த்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், இன்ஸ்டாகிராம் காதலனுடன் சுதர்சனா ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. மேலும், அந்த நபர் மேச்சேரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் சுதர்சனாவையும் அவரது இன்ஸ்டாகிராம் காதலனையும் தேடிவருகின்றனர்.