ஆசையாக வளர்க்கப்பட்ட தத்து குழந்தை..நொடியில் பிரிந்த தாயின் உயிர் - நடந்தது என்ன?

Crime Karur Murder
By Vidhya Senthil Nov 22, 2024 06:24 AM GMT
Report

 தத்து குழந்தை உயிரிழந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 தத்து குழந்தை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி- சித்ரா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட காலம் குழந்தை இல்லாததால் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆசிரமத்தின் மூலம் கடந்த ஓராண்டுக்கு முன் கிஷாந்த் என்ற ஒன்றை வயது ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

ஆசையாக வளர்க்கபட்ட தத்து குழந்தை உயிரிழப்பு

இந்த நிலையில், குழந்தை வீட்டின் அருகில் உள்ள குழாயில் பாசன வாய்க்காலில் தவறி விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

அம்மாவை பார்த்த அதிர்ச்சி..மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 4 வயது சிறுமி - நடந்தது என்ன?

அம்மாவை பார்த்த அதிர்ச்சி..மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 4 வயது சிறுமி - நடந்தது என்ன?

தாய் தற்கொலை 

பின்னர் உறவினர்கள் முன்னிலையில் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் தத்து குழந்தை உயிரிழந்த துக்கத்தில் மன வேதனையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆசையாக வளர்க்கபட்ட தத்து குழந்தை உயிரிழப்பு

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.