47 வயதில் குழந்தை பெற்ற அம்மா; நான் ஏன் வெட்கப்படனும் - கொந்தளித்த நடிகை
பிரபல நடிகை தன் இளைய சகோதரனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆர்யா பார்வதி
மலையாள சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருக்கு தற்போது 23வயது ஆகிறது. தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்தார்.
சில நாட்கள் முன்பு தனது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து தான் விரைவில் சகோதரி ஆக போகிறேன் என்று அறிவித்தார். இவரின் தாய்க்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வந்தனர்.
ஏன் வெட்கப்பட வேண்டும்?
தொடர்ந்து, இதுகுறித்து நடிகை தனது பதிவில் என் பெற்றோர் இந்த விஷயத்தை கூறியதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின்பு எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். இதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
எனது தயக்கம் உடைந்ததும் அடுத்து எனக்கு வர இருக்கும் சகோதரனை வரவேற்க தயாராகிவிட்டேன். இப்போது எனக்கு இளைய சகோதரன் வந்து விட்டான்.மகிழ்ச்சியாக இருக்கிறது, என கருத்து பதிவிட்டுள்ளார்.
தனது தாயாருக்கு குழந்தை பிறந்த தகவலையும், அதனை தான் முதலில் ஏற்க தயங்கி பின்னர் அதனை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.