14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்ற தாய்.. மீண்டும் கர்ப்பம்! ஓர் சுவாரஸ்ய தகவல்

Pregnancy United States of America Viral Photos Relationship
By Sumathi Sep 04, 2022 12:17 PM GMT
Report

16 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி, 20 குழந்தைகள் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

காதல் தம்பதி

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், தன் கணவருடன் வசித்துவருபவர் பேட்டி ஹெர்னாண்டஸ்(40). இவர், இந்த ஆண்டு மே மாதத்தில்தான் தன் 16-வது குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த நிலையில் தற்போது 17-வது குழந்தையைப் பெற்றெடுக்க கர்ப்பமாகியிருக்கிறார்.

14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்ற தாய்.. மீண்டும் கர்ப்பம்! ஓர் சுவாரஸ்ய தகவல் | Mother Of 16 Children Has Become Pregnant For 17Th

இந்த ஜோடிக்கு ஆறு ஆண்களும் பத்து பெண்களும் உள்ளனர், அதில் மூன்று ஜோடி இரட்டையர்கள். குழந்தைகளின் பெயர்கள் கார்லோஸ் ஜூனியர் வயது 14, கிறிஸ்டோபர் வயது 13, கார்லா வயது 11, கெய்ட்லின் வயது 11, கிறிஸ்டின் வயது 10, செலஸ்டி வயது 10, கிறிஸ்டினா வயது 9, கால்வின் வயது 7,

16 குழந்தைகள்

கேத்தரின் வயது 7, காலேப் வயது 5, கரோலின் வயது 5, கமிலா வயது 4, கரோல் வயது 4 சார்லோட் வயது 3, கிரிஸ்டல் வயது 2, மற்றும் கிளேட்டன் வயது 1. இதுகுறித்து, அந்த தாய் பேசுகையில், "தற்போது நான் 13 வார கர்ப்பமாக இருக்கிறேன்.

14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்ற தாய்.. மீண்டும் கர்ப்பம்! ஓர் சுவாரஸ்ய தகவல் | Mother Of 16 Children Has Become Pregnant For 17Th

என் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை சமீபத்தில்தான் அறிந்துகொண்டோம். நான் 14 வருடங்களாக தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறேன், தற்போது எனது 17வது குழந்தையைப் பெற்றெடுக்கப் போவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன்", என கூறினார்.

20 குழந்தை ஆசை

மேலும், 20 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நம்புகிறார். தற்போது வயிற்றில் உள்ள குழந்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்துவிடும். இன்னும் 3 ஆண் குழந்தைகளைப் பெற விரும்புகிறார்.

அப்போதுதான் 10 ஆண் குழந்தைகளையும் 10 பெண் குழந்தைகளையும் கொண்ட குடும்பமாக மாறும் என்று கூறுகிறார். இந்த தம்பதியினர் கருத்தடை செய்துகொள்ள மறுக்கின்றனர். அவர்கள் தனது குழந்தைகளை பிரசவிக்கும் மருத்துவமனையில் செவிலியர்களால் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.