எனக்கு பிறக்கல எனக்கூறிய கணவன்...இரட்டை குழந்தைகளுக்கு எதிராக தாய் செய்த கொடூரம்!
பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு பிறக்கல..
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்ட உடல்கள் ஒரு வீட்டில் இருந்துமீட்கப்பட்டன. இந்த தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஜ்லா-கேயானி கிராமத்தில் முகமது குர்ஷித் வீட்டில் இரட்டை பெண் குழந்தைகளின் உடல்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. இருவரது உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இரட்டை குழந்தைகள்
இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். விசாரணையில், வெளியூரில் வேலை செய்யும் கணவன் மூன்று மாதத்துக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளான். இரட்டை பெண் குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை எனவும், கள்ளத்தொடர்பால் குழந்தைகள் பிறந்தது என கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், மன வேதனையில் இரட்டை குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு பிறக்கவில்லை என தந்தை கூறியதால் மனவேதனை அடைந்த தாய் இரட்டை பெண் குழந்தைகளைகொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.