காதலனுடன் சேர்ந்து மகனை கொடூரமாக கொன்ற தாய் - அதிர்ச்சி சம்பவம்
காதலனுடன் சேர்ந்து தாய், மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடையூறாக மகன்
அசாம், கவுகாத்தியை சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி ராஜ்போன்ஷி. இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எனவே பிரிந்து வசித்து வருகின்றனர். அப்போது தீபாலிக்கு ஜோதிமொய் ஹலோய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கொள்ள தாய் முடிவு செய்துள்ளார்.
தாய் வெறிச்செயல்
அதன்படி, மகன் மிரோனை கள்ளக்காதலுடன் சேர்ந்து ஜோதிமொய் கொடூரமாக கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்க சென்றதில், சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார்.
அதில் சிறுவன் சடலமாக இருந்ததை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விரைந்த போலீஸார், உடலை மீட்டு இதற்கு காரணமான தீபாலி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஜோதிமொய் ஆகியோரை கைது செய்துள்ளனர்.