கணவருக்கு தெரியாமல் 2 குழந்தைகளை கொன்று பிரிட்ஜில் வைத்த பெண் - விசாரணையில் அம்பலம்!
ஒரு பெண் தனது கணவருக்கு கூட தெரியாமல் குழந்தைகளை கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா
தென் கொரியாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்திருக்கிறது. ஆனால் இவர் தனக்கு 3 குழந்தைகள் தான் உள்ளது என்று கூறியுள்ளார். அங்கு ஒரு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு 12, 10, மற்றும் 8 வயதில் மூன்று குழநதைகள் இருக்கின்றனர்.
ஆனால் மருத்துவமனையில் அவருக்கு 5 குழந்தைகள் எனத் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்த விசாரணையில், மற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்" என்று கூறியுள்ளனர்.
குழந்தையை கொன்ற தாய்
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், 'குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் குடும்பம் வறுமையில் இருந்ததால் 5 குழந்தைகளையும் காப்பாற்றுவது கடினம் என கருதியிருக்கிறார்.
அதனால், 2018-ல் பிறந்த பெண் குழந்தையை மறுநாள் வீட்டுக்கு வந்தும் கொன்று, 2019-ல் பிறந்த ஆண் குழந்தையை மருத்துவமனையிலேயே கொலை செய்தும் வீட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார்.
மேலும், அந்த இரண்டு குழந்தைகளும் பிரிட்ஜில் வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது, 'குழந்தைகளை எனது மனைவி கருக்கலைப்பு செய்ததாக கூறினார். இப்போதுதான் எனக்கே உண்மை தெரியவந்தது' எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.