17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!
தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
உத்தர பிரதேசம், சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்தவர் பிங்கி சர்மா (33). இவருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பிங்கி சர்மாவிற்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்தபோது சிறுமி இதனை பார்த்தது மட்டுமல்லாமல் தனது தந்தையிடம் தெரிவித்து விடுவதாக கூறியுள்ளார்.
தாய் வெறிச்செயல்
இதனால் அச்சத்தில் தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். குழந்தையின் சடலத்தை கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த கணவர் மகள் காணவில்லை என்பதால் போலீஸில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், கிணற்றில் சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர் விசாரணையில், உண்மை அம்பலமான நிலையில், பிங்கி சர்மா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.