அப்பாக்கு குட்பை; 3 வயது மகனை கொன்று தற்கொலை செய்த தாய் - கொடூர பின்னணி!
மகனை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மீது ஆத்திரம்
அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர்(32). இவருடைய மகன் கெய்தன்(3).
இந்நிலையில், பூங்காவுக்கு மகனுடன் சென்ற அவர் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். உடனே இதுகுறித்து அறிந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கிரிகரின் முன்னாள் கணவர் மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். வேலை முடிந்து திரும்பிய அவர், நேராக முன்னாள் கணவரின் வீட்டுக்கு சென்றதில் அங்கு அவர் இல்லை. இதனால், வீட்டை அடித்து, நொறுக்கி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
மனைவி வெறிச்செயல்
தொடர்ந்து, வீட்டில் இருந்த திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும், முன்னாள் கணவருக்கு வீடியோ மற்றும் எஸ்.எம்.எஸ். செய்திகளையும் அனுப்பியுள்ளார். அதில், வீட்டுக்கு போனால், ஒன்றும் இருக்காது. உங்களுக்கு என உண்மையில் எதுவும் இல்லை.
இந்த நாளின் முடிவில், உங்களுக்கு என்று எதுவும் இருக்காது. மகனிடம், அப்பாவுக்கு குட்பை சொல்லு எனக் குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.
இறுதியாக பூங்காவில் இருவரும் அமர்ந்திருக்கும் காட்சிகள், கிரிகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் இருந்துள்ளது.