4 வயது மகனை கொன்ற கொடூரத்தாய்; அறையில் சிக்கிய டிஷ்யூ கடிதம்- வழக்கில் அப்டேட்!
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 4 மகனை கொலை செய்து சூட்கேஸில் அடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கொடூரத்தாய்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத்(39) என்ற பெண் தனது 4 வயது மகனுடன் கடந்த மாதம் கோவா சென்று ஓட்டலில் தங்கியுள்ளார். 2 நாட்களுக்கு பின் அறையை செய்த அவர் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் பெங்களூருக்கு வாடகை கார் ஏற்பாடு செய்யமாறு கேட்டார்.
காரில் சென்றால் 12 மணி நேரம் பயணம் ஆகும் எனவே, விமானப் பயணத்தை நிர்வாகத்தினர் பரிந்துரையை சுசனா மறுத்துள்ளார். அவர் புறப்பட்டதும் அறையைச் சுத்தம் செய்த பணியாளர்கள் அங்கு ரத்தக்கறை இருப்பதை பார்த்ததும் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர்.
அப்போது, கார் ஓட்டுநரை தொடர்புகொண்ட போலீஸார், சுசனா சந்தேகிக்காத வகையில் கொங்கணி மொழியில் விவரித்து சுசனாவை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார்.
அந்த வகையில், காவல் நிலையத்தில் இருந்த போலீஸார் சுசனாவிடமிருந்த கனத்த சூட்கேஸை கைப்பற்றி, அதனைத் திறந்து பார்த்தபோது அவரது 4 வயது மகன் சடலம் இருந்தது.இதன்படி, சுசனாவிற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302, 201 மற்றும் கோவா சட்ட பிரிவு 8 ழ் வழக்குப்பதிவு செய்தனர்.
4 வயது மகன்
இந்நிலையில், ஓட்டலில் 4 வயது மகனைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சுசனா சேத் எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக கோவா நீதிமன்றத்தில் சுசனாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.அதில், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுச்சானா சேத் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சிக்கிய டிஷ்யூ காகிதத்தில், ''எனது 4 வயது மகனை என்னிடம் (வெங்கட்ராமன்) அனுப்பாவிட்டால் உன்னை சிறைக்கு அனுப்புவேன் என எனது முன்னாள் கணவரும், குடும்ப நீதிமன்ற நீதிபதியும் மிரட்டுகின்றனர்.
எனது மகனை என்னால் பாதுகாக்க முடியவில்லை. அதற்கான வழியை எனது வழக்கறிஞராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை”என்று எழுதியிருந்தார் என போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கின் குற்றவாளியான சுச்சானா சேத், அவருக்கும் அவரது கணவர் வெங்கட்ராமனுக்கும் இடையேயான விவகாரத்து வழக்கில் பின்னடைவை சந்தித்துள்ளார். தன் மகனை தந்தைக்கு காட்டுவதை பிடிக்காமல், அவரை கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.