தன்பாலின உறவுக்கு வற்புறுத்திய மாமியார்..உடன்படாத மருமகள் - இறுதியில் நேர்ந்த கொடூரம்!

Uttar Pradesh India
By Swetha Jun 26, 2024 12:03 PM GMT
Report

தன்பாலின உறவுக்கு உடன்படாத மருமகள் மீது பிளேடு கொண்டு மாமியார் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தன்பாலின உறவு 

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் ஒரு பெண், திருமணம் முடிந்த நிலையில் இவர் தனது கணவர், மைத்துனர், மாமியார் உள்ளிட்டோருடன் புகுந்த வீட்டில் இருந்து வருகிறார்.அங்கு தன்னை அந்த குடும்பம் வன்முறைக்கு ஆளாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தன்பாலின உறவுக்கு வற்புறுத்திய மாமியார்..உடன்படாத மருமகள் - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Mother In Law Tortured Her Daughter In Law

அவரது புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தியுள்ளனர். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சில நாட்களிலேயே புகுந்த வீட்டில் விசித்திர பிரச்சினைகள் வெடித்தன.

அவற்றின் உச்சமாக மாமியார் தன்னை தன்பால் உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததில் பிளேடு கொண்டு தாக்கியதோடு, பிரச்சினையை திசை திருப்ப கணவன் - மனைவி இடையே பிரச்சனைகளை மூட்டிவிட்டதாகவும் அப்பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

தன்பாலின உறவு - மனைவியை மீட்டுத்தர கோரிய பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தன்பாலின உறவு - மனைவியை மீட்டுத்தர கோரிய பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நேர்ந்த கொடூரம்

மருமகளை பிளேடு கொண்டு மாமியார் தாக்கியதில், கைகளில் 5 இடங்களில் ஆழமான காயங்களுக்கு தையல் போடப்பட்டதில், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், , தனது கணவர் மற்றும் மைத்துனர் என வீட்டின் இரு ஆண்களை ஏவும் மாமியார், தன் மீது தொடர் சித்ரவதைகளை பிரயேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்பாலின உறவுக்கு வற்புறுத்திய மாமியார்..உடன்படாத மருமகள் - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Mother In Law Tortured Her Daughter In Law

தன்னை ஒரு மாத காலத்துக்கு மாற்று ஆடைகூட வழங்காது ஒரு அறையில் தனித்து அடைத்ததாகவும், அதனை தட்டிக்கேட்டதற்கு மைத்துனரைக் கொண்டு தனது ஆடைகளை பறித்துக்கொண்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

மேலும் புகுந்த வீட்டினரால் வரதட்சணை நெருக்கடி மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகத்துக்கு தான் தொடர்ந்து ஆளாக்கப்பட்டதாகவும் போலீஸ் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார். 2023-ல் தனக்கு மகன் பிறந்ததும், புகுந்த வீட்டின் பிரச்சினைகள் சீராகும் என நம்பியதாகவும் ஆனால்,

அந்த குழந்தைக்கு தான் தந்தையில்லை என கணவர் புதிய பிரச்சினையை கிளப்பியதில், நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் கூறினார்.இவை தொடர்பாக ஆக்ரா போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.