தன்பாலின உறவு - மனைவியை மீட்டுத்தர கோரிய பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Tamil nadu Madurai Crime
By Sumathi Jul 30, 2022 04:43 AM GMT
Report

தன்பாலின உறவில் இருந்ததால், குடும்பத்தால் கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு தர கோரிய பெண்ணுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தன்பாலின உறவு

விருதுநகரைச் சேர்ந்த பெண் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

தன்பாலின உறவு - மனைவியை மீட்டுத்தர கோரிய பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Lesbian Seek Help From Madurai Bench Of High Court

கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தோம். கடந்த 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்பெண்ணை கடத்திச் சென்றுவிட்டனர்.

குடும்பத்தினர் எதிர்ப்பு

அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அப்பெண்ணின் சகோதரர் தன்பாலின உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார்.

தன்பாலின உறவு - மனைவியை மீட்டுத்தர கோரிய பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Lesbian Seek Help From Madurai Bench Of High Court

இதுதொடர்பாக வத்தலகுண்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. அப்பெண்ணின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஆகவே பெண்ணை மீட்டு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே அவரது விருப்பப்படி செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.