தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
marriage
girl
boy
By Jon
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பதும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் இந்திய திருமண கலாச்சாரத்தின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
தன் பாலின உறவை சட்டவிரோதம் என அறிவித்த பிரிவு 377 நீக்கப்பட்டு இருந்தாலும், இதை அடிப்படையாகக் கொண்டு தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.