58 வயதில் குழந்தை பெற்ற மாமியார் - ஆத்திரத்தில் புகார் அளித்த மருமகள்
குழந்தை பெற்ற மாமியார் மீது மருமகள் விசித்திரமான புகார் அளித்துள்ளார்.
சொத்து விவகாரம்
ஆக்ரா, கமலா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், திடீரென ஜிம் ட்ரெய்னராக இருந்த அந்த இளைஞர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனால் அந்தப் பெண் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து, கணவரை இழந்த பெண் தனது மாமனார் வீட்டில் சொத்தில் பங்கு கேட்டுள்ளார். ஆனால் கணவர் வீட்டார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மருமகள் புகார்
மேலும், தனது ஒரே மகன் இறந்துவிட்டதால் மருமகளுக்கு சொத்து போகக் கூடாது என்பதால், மாமியார் தனது 58 வயதில் கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது அந்த குழந்தை பிறந்து 5 மாதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் தனக்கு சொத்து கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் மாமியார் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட அலுவலர்கள் வழக்கில் சுமூக தீர்வு எட்ட முயற்சி செய்து வருகின்றனர்.