மாமியார், மருமகள் கூட்டு பாலியல் வன்கொடுமை - மகன் கண்முன்னே கொடூரம்!
மாமியார், மருமகளை அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஆந்திரா, ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் தனியார் பேப்பர் மில் ஒன்றின் கட்டுமானம் நடந்து வருகிறது. வயதான தம்பதி ஒன்று தனது மகன், மருமகளுடன் அங்கேயே தங்கியிருந்து காவலாளி பணியை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் வீட்டின் முன் 5 பேர் கொண்ட கும்பல் கூச்சலிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த முதியவர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு கூறியுள்ளார்.
மகன் முன் கொடூரம்
உடனே, ஆத்திரத்தில் அந்த கும்பல் அவரையும், தட்டிக் கேட்க வந்த அவரது மகனையும் தாக்கியுள்ளனர். மேலும், முதியவரின் வீட்டை சேதப்படுத்தி அந்தக் கும்பல், உள்ளே இருந்த மாமியார் மற்றும் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளனர்.

உடனே, அந்தக் குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி, விரைந்த போலீஸார் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan