அழுதுக்கொண்டே இருந்த பச்சிளம் குழந்தை - சரக்கு ஊற்றிய தாய்!

United States of America Prison
By Vinothini Aug 09, 2023 06:28 AM GMT
Report

தாய் ஒருவர் தனது குழந்தைக்கு சரக்கு ஊற்றிய சம்பவ, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாத குழந்தை

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண். இவருக்கு 2 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை பிறந்து 7 வாரங்களே ஆன நிலையில், அது அழுதுகொண்டே இருந்தது, குழந்தையின் தாய் அதன் அழுகையை அமர்த்தமுடியாமல் இருந்துள்ளார்.

mother-given-alcohol-to-2-months-baby

பின்னர் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றத்திற்காக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது விசாரணையில், அவர் தனது குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் மதுபானத்தை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.