கை குழந்தைக்கு சிகரெட், மது கொடுத்து வற்புறுத்தும் கொடூர தாய்..வெளியான ஷாக் புகைப்படம்!
குழந்தைக்கு சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் தாயே பழக்கபடுத்தும் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கை குழந்தை
அசாம் மாநிலம், சில்சாரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவருக்கு 20 மாதமே ஆன ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவர் தனது குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் வற்புறுத்திய சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை கண்ட சைல்டு லைன் அதிகாரிகள், போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அந்த குடியிருப்பை போலீஸார் சோதனை செய்து குழந்தையை மீட்டனர்.
கொடூர தாய்
அத்துடன் அக்குழந்தையின் தாயை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். இதை தொடர்ந்து தாயும், குழந்தையும் தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், விரிவான விசாரணைக்காக ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அந்தக் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளனர்.
குழந்தையை அன்பான மற்றும் பொறுப்பான குடும்பத்தில் தத்தெடுக்க வேண்டும் என்று சிலரும், அவள் தாயாக இருக்க தகுதியற்றவள். வெளிநாடுகளில் இப்படிப்பட்ட தாய்க்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
In an absolutely disturbing incident, a woman has been found to allegedly force her 20-month-old child to smoke cigarettes and even drink alcohol. The incident took place in the Chengkuri area of Silchar on Wednesday night.
— ForMenIndia (@ForMenIndia_) June 15, 2024
The Child Helpline Cell received a complaint with… pic.twitter.com/fwPZ593pts