தகாத உறவுக்கு இடையூறு; 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - தாய் வெறிச்செயல்!
இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 11 மாத குழந்தையைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கடலூர் மாவட்டம் வடக்கு மூளியூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன் - ஸ்ரீபிரியா (19). இவர்களுக்கு 11 மாதத்தில் கலையரசன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
ஸ்ரீபிரியாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீபிரியா தனது குழந்தையுடன் மாயமானார்.
இதனையடுத்து கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஸ்ரீபிரியா, கள்ளக்காதலன் சிலம்பரசன் மற்றும் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர்.
குழந்தை கொலை
அப்போது ஸ்ரீபிரியாவின் உறவினர் சிலம்பரசன் என்பவர் தற்செயலாக அவரை சந்தித்து குழந்தையை பற்றி விசாரித்துள்ளார். அப்போது பிரியா திருதிருவென முழித்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால், 2 மாதத்துக்கு முன் கொலை செய்து திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியதாக தெரிவித்தனர்.
பின்னர் ஓடையிலிருந்து அழுகிய நிலையில் 11 மாத குழந்தை கலையரசனின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து ஜெயசூர்யா, ஸ்ரீபிரியா கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.