மனைவியும், கள்ளக் காதலியும் கொடுத்த டார்ச்சர்; 45 வயது நபர் எடுத்த விபரீத முடிவு - உருக்கமான பேஸ்புக் பதிவு!

India Rajasthan Death
By Jiyath Aug 13, 2023 05:21 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தம்பதியினர் பாரத் மிஸ்ரா (45) மற்றும் கவுசல்யா . இவர் பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 21ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் குடும்ப வாழ்க்கை எப்போதும் சண்டை சச்சரவுகளாக இருந்து வந்துள்ளது.

மனைவியும், கள்ளக் காதலியும் கொடுத்த டார்ச்சர்; 45 வயது நபர் எடுத்த விபரீத முடிவு - உருக்கமான பேஸ்புக் பதிவு! | Man Commits Suicide Blames Wife And Girlfriend I

இந்நிலையில் பாரத் மிஸ்ராவுக்கு, பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் மனைவி கவுசல்யாவுக்கு தெரியவர பெரும் சண்டையாக வெடித்துள்ளது. இதற்கு பின்னரும் மிஸ்ரா கள்ளக் காதலியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இரு பக்கமும் இருந்த பெண்களும் மிஸ்ராவுடன் தினமும் சண்டையிட தொடங்கியுள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான மிஸ்ரா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் தனது பேஸ்புக்கில் பதிவையும் மிஸ்ரா பதிவிட்டிருந்தார்.

பேஸ்புக் பதிவு

அந்த பதிவில் '"என் மரணத்திற்கு காரணம், மனைவி கவுசல்யாவும், காதலி பின்சி பெரேராவும்தான். இவர்கள் 2 பேரும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் இந்த முடிவை எடுக்க வைத்துவிட்டது. என் மனைவி கவுசல்யா எல்லா இடங்களிலும் என்னை அசிங்கப்படுத்தினார். இழிவாக நடத்தினார். அவரிடமிருந்து எனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்கவில்லை.

மனைவியும், கள்ளக் காதலியும் கொடுத்த டார்ச்சர்; 45 வயது நபர் எடுத்த விபரீத முடிவு - உருக்கமான பேஸ்புக் பதிவு! | Man Commits Suicide Blames Wife And Girlfriend I

அதனால், அவரை விவாகரத்து செய்ய பலமுறை நினைத்தேன். ஆனால், என்னுடைய வயதான அம்மா, அப்பாவுக்காகவும், அவர்களின் மீதான மரியாதைக்காகவும், கவுசல்யா செய்யும் டார்ச்சரை எல்லாம் சகித்துக்கொண்டேன். அதற்கு பிறகு, அவரை பிரிந்து என்னுடைய வழியில் வாழ ஆரம்பித்தேன். அப்போதுதான், பின்சி பெரேராவை சந்தித்தேன். ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், பெரேரா வீட்டிற்கு வந்ததுமே, கவுசல்யா இன்னும் என்னை கேவலமாக பேசினார்.

அதனால், நானும் பெரேராவும் நீண்டகாலமாக கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஒருகட்டத்தில், பெரேராவும், என் மனைவி கவுசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க, எங்களுக்குள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. கவுசல்யா என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். பெரேராவும் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்.

பெரேரா... நீயும் என் வாழ்வை பாழாக்கி விட்டாய்.. உங்க 2 பேராலும்தான் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்" என்று மிஸ்ரா பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.