குழந்தையின் சடலத்தை10 கி.மீ சுமந்து சென்ற தாய் - அடிப்படை வசதி இல்லாததால் நிகழ்ந்த சோகம்!
பாம்பு கடித்து குழந்தை இறந்தது, போதுமான சாலை வசதி இல்லாமல் பெற்றோர்கள் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பகுதி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அல்லேரி மலைப் பகுதியில் உள்ள அத்திமரத்துகொல்லையைச் சேர்ந்தவர் விஜி, பிரியா தம்பதியினர்.
இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா.

இவர் கடந்த 26-ம் தேதி இரவு வீட்டின் முன்பு குழந்தையை தூங்க வைத்துவிட்டு, பெற்றோரும் அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, காட்டுப் பகுதியில் இருந்துவந்த கொடிய விஷப்பாம்பு ஒன்று, குழந்தையை தீண்டி கடித்துவிட்டது.
அப்போது குழந்தை அலறியதும் பெற்றோர் எழுந்து பார்த்துள்ளனர், அங்கு குழந்தை அருகில் ஒரு விஷ பாம்பு இருந்துள்ளது.
சோகம்
இந்நிலையில், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அங்கு மருத்துவமனை 30கி.மீ தொலைவில் உள்ளது.

மேலும், 10 கி.மீ க்கு சாலை கிடையாது, அதுவரை குழந்தையை இருவரும் சுமந்து சென்றுள்ளனர்.
அதற்கு பின்னர் வண்டியை பிடித்து அணைக்கட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது குஇலந்தை இறந்துவிட்டதாக கூறினார், பெற்றோர் கதறி அழுதனர். பின்னர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி பிரேத பரிசோதனை முடிந்ததும் குழந்தையின் சடலத்தை கையில் கொடுத்தனர்.
தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் மலை அடிவாரம் வரை குழந்தையின் உடல் கொண்டுசென்று கொடுக்கப்பட்டது. அதன்பின் பாதை இல்லாததால் ஆம்புலன்ஸ் திரும்பிச்சென்றுவிட்டது.
அதனால் குழந்தையின் உடலை பத்து கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்தபடியே நடந்து மலைக் கிராமத்தை சென்றடைந்தார்.
ஊருக்குள் கொண்டுசென்ற பின்னர் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan