3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தாய்; திடீரென நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்!
3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோதே தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பெண் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தை சேர்ந்த தம்பதி மதன்குமார்-பூரணி. இவர்களுக்கு பிறந்து மூன்று மாதமே ஆன குழைந்தை உள்ளது. பூரணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் மதன்குமார் உடனடியாக பூரணியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இதனையடுத்து பூரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பூரணிக்கு ஏற்கனவே உடலில் பிரச்சனை ஏதும் இருந்துள்ளதா? வேறு ஏதாவது காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் தெரியவரும்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.