மஞ்சள் உற்பத்தியில் 2ம் இடம்.. விவசாயமும் நீர்வளமும் நிறைந்த ஈரோட்டின் வியக்கவைக்கும் வரலாறு!

Tamil nadu Erode
By Vinothini Aug 28, 2023 12:05 PM GMT
Report

தென்னிந்தியாவின் முக்கிய மாவட்டமான ஈரோட்டின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சிறப்புகள்

ஈரோடு என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பவானிசாகர் அணைக்கட்டு. இது இம்மாவட்டத்தின் நீர்ப்பாசன வசதிக்கு பெரிய அளவில் பங்களிக்கின்றது, இது சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகவும் அணைக்கட்டு இருக்கின்றது. ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்திக்கு புகழ்பெற்ற மாவட்டம். இங்குதான் தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

erode-history-in-tamil

இங்கிருந்துதான் மஞ்சள் அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தமிழகத்தில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் பிறந்த ஊர். உலக அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளை இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. ஊத்துக்குளி வெண்ணையும் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று.

ஈரோட்டிலிருந்து துணி தயாரிப்புகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்றன. உலகப் புகழ்பெற்ற பன்னாரியில் உள்ள பன்னாரி அம்மன் கோவில், பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதியும் சங்கமமாகும் சங்கமேஸ்வரர் ஆலயமும் இவ்வூரின் தனிச்சிறப்பாகும்.

பெயர்க்காரணம்

'ஈரோடு' எனும் சொல்லானது, பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இது ஈரோடு மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் இணைந்த நிலப்பகுதி முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. கொங்கு மண்டலம் வரலாறு சங்ககால வரலாற்றுடன் இணைந்ததாகும். இந்த மாவட்டம் சேரர், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது.

erode-history-in-tamil

காலனி ஆதிக்க காலத்தில் இந்த மாவட்டம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈரோடு முக்கிய பங்கு வகித்தது, கே.காமராஜ், சி.ராஜகோபாலாச்சாரி, மற்றும் எஸ்.சத்தியமூர்த்தி போன்ற முக்கிய தலைவர்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மாவட்டத்தில் பெரும்பள்ளம் அணை, திண்டல் முருகன் கோயில், கொடுமுடி கோயில் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இம்மாவட்டம் 1996 வரை பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது, அதன்பிறகு ஈரோடு என்று அழைக்கப்பட்டது.

கலாச்சாரம்

ஈரோடு மாவட்டம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் கலப்பு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. பின்னல் கோலாட்டம், வாலாட்டம், காவடி உள்ளிட்ட பாரம்பரிய கலை வடிவங்களுக்கு இந்த மாவட்டம் பெயர் பெற்றது. சைவம் மற்றும் அசைவ உணவுகளை உள்ளடக்கிய சுவையான உணவு வகைகளுக்கும் இந்த மாவட்டம் பெயர் பெற்றது.

erode-history-in-tamil

கொங்குநாடு சிக்கன், செட்டிநாடு மீன் பொரியல், இறால் பிரியாணி ஆகியவை மாவட்டத்தின் புகழ்பெற்ற உணவுகளாகும். இம்மாவட்டத்தில் கொங்கு வேளாளர் விழா, கார்த்திகை தீப விழா, பொங்கல் விழா என பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

விவசாயம் மற்றும் தொழில்கள்

ஈரோட்டில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம்.

erode-history-in-tamil

எனவே இது ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே அப்துல் கனி துணி சந்தை போன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல ஜவுளி சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். இங்கு தோல் பதனிடும் தொழிலும் இங்கே குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. விவசாயம் சார்ந்த புற நகர்ப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால், நவீன அரிசி ஆலைகளும், தீவனத் தொழிற்சாலைகளும், எண்ணை ஆலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன.

ஆறுகள்

பவானி, காவேரி, பாலாறு, உப்பாறு, நொய்யல், மோயாறு ஆகியன ஈரோடு மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். வடக்கில், பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கருநாடக மாநிலத்திற்கும்எல்லையாக அமைந்துள்ளது. மேற்கூறிய ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து வரும், கீழ்பவானித் திட்ட முக்கிய கால்வாய்களும் இம்மாவட்டத்தில், முறையான பாசனத்திற்கு பாசனத்திற்கு பயன்படுகின்றன.

erode-history-in-tamil

பவானி ஆறு, கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதி, அமைதிப் பள்ளத்தாக்கு என்னுமிடத்தில் உற்பத்தியாகி, சிறுவாணி என்ற ஓடை, குந்தா ஆறு ஆகியவற்றுடன் இணைந்து, இந்த் மாவட்டத்தின் சத்தியமங்கலம் வட்டத்தினை அடைகிறது.

பவானி ஆறு வற்றாத ஆறாகவும், தென் மேற்கு பருவமழைக் காலத்தில் அதிக அளவு மழைநீரையும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஓரளவு மழைநீரையும் பெறும் ஆறாகவும் உள்ளது.

பவானி சாகர் அணை

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்பிற்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான். டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கியுள்ளது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டையை காண இயலும்.

erode-history-in-tamil

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது.

இது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும்.

சங்கமேஸ்வரர் கோவில்

சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கமேஸ்வரர் மற்றும் வேத நாயகியோடு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இது பவானி ஆறு காவேரி ஆறு அமுதா நதியும் சங்கமிக்கும் பவானியில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் திரிவேணி என்றும் அழைக்கப்படுகின்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலத்தில் அப்போதைய கோவை, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த. வில்லியம் கேரோ, பவானிதலைமையகத்தில் தங்கியிருந்தார்.

erode-history-in-tamil

அப்போது ஒருநாள் கனவில் தோன்றிய வேதநாயகி அம்மன் உடனே மாளிகையை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடகேரோவும் வெளியேறினாராம். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் மொத்த கட்டிடமும் இடிந்து இடிந்து விழுந்ததாம்.

இப்படி தன்னை காப்பாற்றிய தெய்வத்திற்கு நன்றி கடனாக அவர் காணிக்கை செலுத்திய தந்த தொட்டில் நாகர்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதில் அவர் கையெழுத்தும் இருக்கின்றது.

தந்தை பெரியார்

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி, இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி, செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973. இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.

erode-history-in-tamil

இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

erode-history-in-tamil

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.