மரப்பலகையில் தாயின் சடலத்தை கட்டி பைக்கில் எடுத்துச் சென்ற அவலம்!

Viral Video Madhya Pradesh Death
By Sumathi Aug 02, 2022 07:52 AM GMT
Report

மரப்பலகையில் தாயின் உடலை வைத்து கயிற்றால் கட்டி தனது பைக்கிலேயே 80 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

இறந்த தாய்

அனுப்பூர் மாவட்டம் கோடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் மந்த்ரி யாதவ். இந்த பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இவர் அனுப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மரப்பலகையில் தாயின் சடலத்தை கட்டி பைக்கில் எடுத்துச் சென்ற அவலம்! | Mother Body Tied On A Wooden Board Madhya Pradesh

அவரின் மகன் சுந்தர் யாதவ் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெய்மந்த்ரிக்கு உடல்நிலை மோசமடைந்தும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஷாடோல் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

மருத்துவமனை அலட்சியம் 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜெய்மந்த்ரி உயிரிழந்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோடாரு கிராமத்திற்கு ஜெய் மந்த்ரியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அமரர் உறுதி தரவில்லை.

தனியார் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல முயன்ற போது அவர்கள் ஐயாயிரம் ரூபாய் கேட்டதால் அந்தப் பணத்தை கொடுக்க சுந்தர் யாதவால் முடியவில்லை. இதனால் 100 ரூபாய்க்கு ஆறு அடி நீள மரப்பலகை வாங்கி அதன் மேல் தாயின் உடலை வைத்து கயிற்றால் கட்டி

கண்டனம்

பின்னர் பைக்கில் தூக்கி வைத்து பின்னால் சகோதரர் பிடித்துக்கொள்ள, சுந்தர்ராஜ் பைக்கினை ஓட்டிச் சென்று இருக்கிறார். 80 கி.மீ சென்று தாயின் உடலை வீட்டில் சேர்த்து இருக்கிறார்.

பைக்கில் சடலத்தை எடுத்துச் செல்லுவதை கண்ட சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர். ஷாடோல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அனைத்து வசதிகள் இருந்தும் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.