இறந்த தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்

By Nandhini May 16, 2022 06:09 AM GMT
Report

சென்னை நீலாங்கரை, சரஸ்வதி நகர், 2வது சாலையைச் சேர்ந்தவர் செண்பகம் (86). இவருடைய மகன் சுரேஷ் (53). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், சில நாட்களாக தாய் செண்பகம் வெளியே வரவில்லை. என்ன... ஆச்சு.. அவருக்கு என்று சந்தேகப்பட்ட அக்கம், பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டனர்.

அம்மா எங்கே? என்று... அதற்கு சுரேஷ் என் அம்மா செத்துப்போச்சு... அதனால, நான் வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

86 வயதான செண்பகத்தின் உடலை, ட்ரமிலிருந்து எடுக்க முயற்சி செய்தனர். எடுக்க முடியாததால், ட்ரம் உடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் உடலை ட்ரம்மில் மூடி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம் | Mother Death Son Tragic Incident