மகனின் ஆசை; 11 வயது சிறுமியை கடத்திய தாய் - அதிர்ச்சி பின்னணி!
11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
சீனா, குஜிங் நகரத்தைச் சேர்ந்தவர் யாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட பெண். இவர் லியுபன்ஷூய் நகரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவரைச் சந்திக்க சென்றுள்ளார்.
மேலும், சிறுமியை தனது 27 வயது மகனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணியுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், யாங் தனது மகனுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை புகாரளித்ததன் பேரில், யாங் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாயும் மகனும் மேல்முறையீடு செய்தனர்.
சிறுமி கடத்தல்
அதன் விசாரணையில், இந்த தீர்ப்பை உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையில், நான்கு நாட்கள் சிறுமி அவர்களின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் டோங் யாங் சி என அழைக்கப்படும் குழந்தை மணப்பெண்களின் பழங்கால பாரம்பரியம் உள்ளது.
அங்கு ஒரு குடும்பம் இளம் பருவத்திற்கு முந்தைய பெண்ணை தத்தெடுத்து தங்கள் மகன்களில் ஒருவருக்கு வருங்கால மனைவியாக வளர்க்கிறது. இந்த பழங்கால மரபு 1950-ல் தடை செய்யப்பட்ட போதிலும், கிராமப்புறங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது. இது சிறுமிகள் கடத்தப்படுவதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.