காணாமல் போன தாய்; தேடி சென்ற மகனும் பலி - நடந்தது என்ன?
குன்னூரில் காணாமல் போன தாயை தேடி சென்ற மகனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் 71 வயதான மெஹ்ரூன். இவருக்கு 41 வயதில் ஃபைரோஸ் கான் என்ற மகன் உள்ளார்.கனரக ஓட்டுநராக பணிபுரியும் ஃபைரோஸ் கானுக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
கடந்த 5 ம் தேதி மெஹ்ரூன் காணாமல் போன நிலையில், அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில், காட்டேரி குடியிருப்பு அருகில் புதர்கள் நிறைந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறை
சந்தேகமடைந்த ஃபைரோஸ் கான், அக்கம் பக்கத்தினருடன் நேற்று மாலை அங்கு சென்று தேடியிருக்கிறார். புதரில் தாயின் சடலம் கிடப்பதைக் பார்த்த ஃபைரோஸ் கான், அருகே சென்று தாயின் சடலத்தை மீட்க முயற்சித்துள்ளார். ஆனால், ஃபைரோஸ் கான் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி யாரும் கிட்டே செல்லவில்லை.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், குன்னுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட பெரோஸ் கானை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த காவல் துறை, "காட்டேரி பகுதியில் மின்கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது. இது தெரியாமல் விறகு சேகரிக்கச் சென்ற மெஹ்ரூன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதை அறியாமல் அருகில் சென்ற ஃபைரோஸ் கானின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து அவரும் உயிரிழந்துள்ளார்.