கதையே கேட்கமாட்டார்.. அஜித்தை பல பேருக்கு பிடிக்காது.. காரணம் இதான் - பிரபலம் ஒபன்டாக்!
அஜித்தை பல பேருக்கு பிடிக்காததின் காரணத்தை பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார். அவருக்கென ஒரு ரசிகர்கள் கடலே உள்ளது. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பில்லா திரைப்படத்திற்கு பிறகு ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் உடன் பணியாற்றியது குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவாது, "அஜித் உடன் ஆரம்பம் படத்தில் பணியாற்றிய பொழுது,
அவர் கதை கேட்கவே இல்லை. நாம் ஒன்றாக பணிபுரிய இருக்கிறோம் என்று மட்டும் கூறி என்னை கமிட் செய்து விட்டார். அதீத நம்பிக்கைஅவரிடம், நான் உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என்று கேட்கும் பொழுது,
காரணம் இதான்..
உங்களுக்கு எப்போது என்னிடம் கதை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது நீங்கள் சொல்லுங்கள். அவசரப்பட்டு சொல்ல வேண்டாம் என்று அதீத நம்பிக்கை வைத்தார். பில்லா படத்தில் அவர் கோட் சூட் அணிந்து வந்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
வேறு யாராக இருந்தாலும், அந்த படம் போலவே இந்த படத்திலும் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால், அஜித் சார் அப்படி எதுவுமே சொல்லவில்லை. அவரிடம் சென்று நான் உங்களுக்கு இந்தப்படத்தில் டி-ஷர்ட் மட்டும் தான் என்று கூறிய போது கூட,
அவர் எதுவுமே என்னிடம் கூறவில்லை. அஜித் சாரிடம் எனக்கு மிக மிக பிடித்தது, எந்த ஒரு விஷயத்தையும் முகத்திற்கு நேராக பேசுவது. உண்மையில் 10 பேரிடம் ஆலோசனை கேட்டு பேசும் நபரை விட,
சொந்தமாக யோசித்து அவருக்கு தோன்றுவதை பேசும் நபரை சமாளிப்பது மிக மிக ஈஸி. அப்படியான நபர்தான் அஜித் சார் அதன் காரணமாகவே அஜித் சாரை பல பேருக்கு பிடிக்காது. ஆனால் எனக்கு அஜித் சாரை மிகவும் பிடித்ததற்கான காரணம் அதுதான்." என்று தெரிவித்துள்ளார்.