உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா? அதில் இந்தியா எப்படி?
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஸ்போர்ட்
ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் மிகவும் அவசியமானது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் பட்டியலின் படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் 6 நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைக்கப்படுகிறது.
இந்தியா?
அதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை கொண்டு 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது அங்கு சென்று விசாவை பெற்றுக்கொள்ளாலாம்.
இந்தியா இந்த பட்டியலில் 80வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வெறும் 60 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலை மாறி தற்போது 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது.