உலகின் அமைதியான நாடுகள் பற்றி தெரியுமா? தொடர்ந்து முதலிடம் இதுதான்!
உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
அமைதியான நாடு
ஐஇபி எனும் வல்லுநர் அமைப்பான பொருளியல், அமைதிக் கழகம் உலகின் அமைதியான நாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
2008ஆம் ஆண்டிலிருந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. சிங்கப்பூர் நான்கு இடங்கள் முன்னேறியிருக்கிறது. 2022ஆம் ஆண்டில் 10வது இடத்தைப் பிடித்தது.
பட்டியல் வெளியீடு
டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
பெரும்பாலான ஆசிய நாடுகள் தான் பட்டியலின் முதல் பாதியில் இடம்பிடித்துள்ளன.