உலகத்தோடு தொடர்பே இல்லாமல் வாழும் பழங்குடியினர்கள் - விலகாத மர்மம்!
உலகத்தோடு தொடர் இல்லாமல் 5 பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
சென்டினலீஸ்
சென்டினலீஸ் பழங்குடி - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வடக்கு சென்டினல் தீவில் ஒரு பழங்குடி வாழ்கின்றனர், இது சென்டினலீஸ் பழங்குடி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீவுக்குச் செல்வதை அரசாங்கம் முற்றாகத் தடை செய்துள்ளது. மக்கள் தொகை 50 முதல் 200 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோர்வை
பப்புவா நியூ கினியாவில் 40 க்கும் மேற்பட்ட கோர்வை பழங்குடியினர் உள்ளனர். 1970 ஆம் ஆண்டில் காணப்பட்டனர். அங்கு ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர் திடீரென்று அந்தப் பகுதியில் தொலைந்து போனபோது கண்டறியப்பட்டது.
Yanomami ரிசர்வ்
பிரேசில் மற்றும் வெனிசுலா இடையே Yanomami ரிசர்வ் என்று அழைக்கப்படும் இடம் உள்ளது. அங்கு மக்கள் தொகை 100 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், சில வான்வழி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில், மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவது தெரியவந்தது.
மாஷ்கோ-பிரோ
பெரு, அமேசான் காடுகளில் உள்ளது மாஷ்கோ-பிரோ. மக்கள் தொகை 600 முதல் 800 வரை இருக்கும். தற்போது, இவர்கள் வெளியாட்களை அதிகம் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். அடிக்கடி அரசாங்க சோதனைச் சாவடிகளில் நின்று மக்களிடம் உணவு கேட்பது அல்லது ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு சிக்னல் கொடுப்பது என வாழ்ந்து வருகின்றனர்.
அயோரியோ
அயோரியோ- பராகுவேயில் அயோரியோ பழங்குடியினர் வசித்து வருகின்றனர். எந்த தொடர்பும் இல்லாத கடைசி பழங்குடியினராகக் கருதப்படுகிறார்கள். 2004-ம் ஆண்டு தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால் அங்கிருந்து ஓடும்போது வெளியுலகில் முதலில் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.