பழங்குடியின பெண்ணை காலனியால் சரமாரியாக அடித்து விரட்டிய நபர் - பரபரப்பு
பழங்குடியின பெண்ணை காலனியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின பெண்
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள குறிச்சிநகர் பகுதியில் சாலையோரம் கிடந்த பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தார் பழங்குடியின பெண்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த திமுக வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சுவாமிநாதன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியதுடன் தனது காலனிகளால் அடித்து விரட்டியுள்ளார்.
சரமாரி தாக்குதல்
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுவாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.