ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.1,126; அமெரிக்கா, இங்கிலாந்து இல்ல - எங்கு தெரியுமா?
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.1,126க்கு விற்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து உலகின் மிகவும் விலையுயர்ந்த நாடுகளில் ஒன்று. உலகளவில் நான்காவது மிகவும் விலையுயர்ந்த நாடாக உள்ளது. இங்கு வாழ ஒருவர் மாதத்திற்கு 2850 அமெரிக்க டாலர் சம்பாதிக்க வேண்டும்.
1 லிட்டர் மினரல் வாட்டரின் விலை தோராயமாக ரூ.1,126. நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் விலை அதிகம். தண்ணீருக்காக மட்டும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
வாட்டர் விலை
இது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட மிகவும் விலை அதிகம். பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில்,
இங்கு பொருட்களின் விலை அதிகம்தான். இந்நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் இங்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.