வரலாற்றில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட விருந்து இதுதான் - இன்றுவரை ரீச் பண்ணமுடியல!
வரலாற்றில் மிகவும் ஆடம்பரமாக வைக்கப்பட்ட விருந்து குறித்து பார்ப்போம்.
ஆடம்பர விருந்து
முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை சுமார் ரூ.5,000 கோடி செலவில் மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். இதுவரை நடைபெற்ற திருமணங்களில் மிகவும் விலை உயர்ந்த திருமணமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
ஆனால், வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஒரு கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. விருந்தினர்களை தங்க வைப்பதற்காக பாலைவனத்தில் தற்காலிக நகரமே உருவாக்கப்பட்டது. இதற்காக பிரான்சில் இருந்து 40 டிரக்குகள், 100 விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அதில், 600 விருந்தினர்கள்தான் பங்கேற்றனர். ஆனால், 8 டன் மளிகைப் பொருட்கள், 2,700 கிலோ இறைச்சி, 2,500 ஷாம்பெய்ன் பாட்டில்கள், 1,000 ஒயின் பாட்டில்கள், பாரிசில் இருந்து சமையல்காரர்கள், சுவிட்சர்லாந்தில் இருந்து பந்தி பரிமாறுவோர், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட 10,000 தங்கத் தட்டுகள் என ஆடம்பர பொருட்கள் இடம்பெற்றிருந்தது.
பாரசீக பேரரசு
பாரசீக பேரரசின் 2,500ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த 1971ல் ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த விருந்து நடத்தப்பட்டது. அதில், பல நாடுகளின் பேரரசர்கள், அரசர்கள், ராணிகள், இளவரசர்கள், ஷேக்குகள், சுல்தான்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முகமது ரேசா பஹ்லவி நடத்திய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை, 600 விருந்தினர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிட்டனர். அப்போது செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 100 மில்லியன் டாலர்கள். இன்றைய பண மதிப்பில் ரூ.5,000 கோடியை விட மிகவும் அதிகம்.
நவீன வரலாற்றில் மிக நீண்ட மற்றும் ஆடம்பரமான விருந்தாக இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
ஈரானின் கடைசி மன்னர் முகமது ரேசா பஹ்லவி தான் இந்த விருந்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.