40 கோடி பங்களா...மெர்சிடிஸ் கார் !! கூட்டம் கூட்டமாக வந்த பாலிவுட் - அள்ளி கொடுத்த அம்பானிகள்
அம்பானி குடும்பத்தின் திருமணம் உலகம் திரும்பி பார்க்கும் படி நடந்து முடிந்துள்ளது.
அம்பானி திருமணம்
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அவர்களுக்கு பரிசுகளை வாரி இறைத்துள்ளார் அம்பானி. இது தொடர்பான செய்திகளும் தற்போது வெளிவந்துள்ளது.
பரிசுகள்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு பரிசாக 40 கோடி மதிப்பில் பிரான்ஸ் நாட்டில் அபார்ட்மெண்ட் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
அதே போல அமிதாப் பச்சனுக்கு குடும்பதிற்கு ரூ.30 கோடி மதிப்பில் மரகத மாலை, ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதி ரூ.20 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் கார், நடிகர் சல்மான் கான் ரூ.15 கோடி மதிப்பில் ஸ்போர்ட்ஸ் பைக் என பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தோடு நில்லாமல், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு 9 கோடி ரூபாயில் மெர்சிடிஸ் கார், அக்ஷய் குமாருக்கு 60 லட்சத்தில் என தனி தனி விலையுர்ந்த பரிசுகளை வாரி வழங்கி இருக்கிறார்கள் அம்பானிகள்.
இத்துடன் சேர்த்து, துணை மாப்பிளைகளுக்கு ரூ.2 கோடியில் பிரத்தியேக வாட்ச் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் தம்பதி 19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி வழங்கப்பட்டுள்ளது